மதரஸா

السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ

இது மதரஸா மழ்ஹருல் ஹுதா உடைய அதிகாரபூர்வமற்ற வலைத்தளம்.

மதரஸா மழ்ஹருல் ஹுதா ஒரு இஸ்லாமிய கலை கல்லூரி. இந்த மதரஸா புதுவை மாநிலத்தில் 1991 ஆம் ஆண்டு,  தட்டாஞ்ச்சாவடி பகுதி பெரியோர்களுடைய மற்றும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுடய கவலையால், ஆரம்பிக்கபட்டது. இந்த மதரஸா, மழ்ஹருல் ஹுதா என்று ஹஜ்ரத் கிப்லா ஷேய்க்குல் ஹதீத் யாகூப் ஹள்ரத் அவர்களால் பெயரிடப்பட்டது.

mazharulhuda
மதரஸா கட்டிடம்

தட்டாஞ்ச்சாவடி நூரே முஹம்மதியா பள்ளியில் 1991 ஆம் ஆண்டு சிறிய முறையில் ஆரம்பிக்கபட்ட இந்த மதரஸா இப்போது வளர்ந்து புதுச்சேரி குத்பாபள்ளிக்கு சொந்தமான நெல்லித்தோப்பு ஈத்கா வளாகத்தில் 2003 ஆம் வருடம் முதல் அல்லாஹ்வின் அருளால் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. திறமையும் ஒழுக்கமும் உள்ள உலமாக்களை, ஹாஃபிழ்களை உண்டாக்குவதின் மூலம் புதுவை இஸ்லாமிய சமுதாயத்தில் தனக்கென்று ஒரு பெயரையும், இடத்தையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

நமது மதரஸாவில் தற்போது சுமார் 40 மாணவர்கள் தங்கி கல்வி பயில்கின்றனர். இவர்களுக்கு தாங்கும் வசதி, மூன்று நேரம் உணவு மற்றும் மருத்துவ செலவினங்களும் செய்யப்படுகிறது. இவை அனைத்தும் எவ்வித கட்டணமும் இன்றி அல்லாஹ்வின் கிருபையினாலும், மிகபெரும் உதவியினாலும் நடைபெற்று வருகிறது.

இந்த மதரஸா தூய எண்ணத்துடன் அல்லாஹ்விற்காக நடை பெற அல்லாஹ் கிருபை செய்வானாக! அல்லாஹ் இப்பணியை ஏற்றுக் கொள்வானாக! இம்மதரஸா சிறப்பாக நடை பெற உறுதுணையாக இருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும், அவனது நல் அருளை பூரணமாக கொடுத்து ஈருலக வாழ்க்கையை சிறப்பாக்கி வைப்பானாக! ஆமீன்! அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் !

1 thoughts on “மதரஸா

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.